வீழ்வதும் அழகே நீரருவியாய் இருந்தால்!
தலை தாழ்வதும் அழகே நெற்கதிராய் இருந்தால்!
தொடர்தோல்விகள் அழகே - அலைகடலாய் இருந்தால்!
தெளிவின்மையும் அழகே - படர்பனியாய் இருந்தால்!
சிதறல்கள் அழகே - விண்மீனாய் இருந்தால்!
கதறலும் அழகே - கார்முகிலாய் இருந்தால்!