அரசியல் என்பது எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது. அதில் ஆயிரம் மாற்றங்கள் வரும். ஆனால் மாணவர்களின் கடமை என்பது அவர்களுக்கு முன்னால் தரப்பட்டிருக்கும் பாடத் திட்டத்தை படிப்பது மாத்திரமே.
இல்லாவிடில் வேறு பாடத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லை மிகப் பெரிய அநீதி இழைக்கப் படுகிறது என நினைத்தால் அன்று இந்தி எதிர்ப்புக்காக மாணவர்கள் களம் இறங்கி போராடியது போல் களமிறங்க வேண்டும்.
தற்கொலை செய்து கொள்வது எந்த வித த் திலும் ஆதரிக்க தக்கதல்ல. பெற்றோர்கள் கல்வியாளர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு விருப்பமில்லாத கல்வியை அல்லது அவர்களால் முடியாது என அச்சப்படும் கல்வியை அவர்கள் அடைந்தே தீர வேண்டும் என்று நிபந்தனை விதிக்காதீர்கள். பிள்ளைகளில் சிலர் மருத்துவர்களாகா விட்டால் நட்டமொன்றுமில்லை. ஆனால் அனைத்து குழந்தைகளும் தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும்.
No comments:
Post a Comment