குறளோவியம் -
கலைஞர் மு. கருணாநிதி
காலை நேரம், புலவர் கபிலர், பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார். தரையுடன் ஒட்டிக்கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் நுனியில், திணையின் அளவைக் காட்டிலும் குறைவான ஒரு பனித்துளி யையும் அவர் காண்கிறார்.
பனித்துளியை உற்று நோக்குகிறார். அந்த பனித்துளியின் அளவுக்குள் - ஆங்கருகே ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் முழுவதும் தெரிகிறது! அந்தக் காட்சி கபிலரைக் கற்பனைச் சிறகடித்துப் பறக்கச் செய்கிறது! "ஆகா! ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுவதும் தெரிகின்றதே;
இதே போலத்தான் வள்ளுவரின் குறட்பாவுக்குள்ளும் இந்த வையகத்துக்குத் தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது" என்கிறார்.
குர்ஆன், பைபிள், பகவத்கீதை போன்றவை, மார்க்க மத நூல்களாகப் போற்றப் படுகின்றன!
குறள், ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது மார்க்கத்தின் வழி காட்டும் நூலாக இல்லாமல், பொதுவான வாழ்க்கை நெறி வகுக்கும் நூலாகத் திகழ்கிறது.
No comments:
Post a Comment