Wednesday, March 19, 2025

 என் பார்வையில் காதல்

ஒவ்வொருவரது வாழ்விலும் திருப்புமுனையாக அமைவது காதல்தான். சிலரது வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு செல்லும், ஒரு சிலரது வாழ்வை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அது அவரவர் தேர்ந்தெடுக்கும் நபர்களைப் பொறுத்தே அமையும். 


அன்பு அனைத்தையும் மாற்றியமைக்கும் சக்தி பெற்றது. அதில் எந்தவித சுயநலமோ போலித்தன்மையோ இருக்காது.


இருவருமே எந்தவிதமான எதிர்ப்பார்ப்புமின்றி அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். நிபந்தனைகளற்ற அன்பே 

உறவுகளை வலுப்படுத்துகிறது.


தனது துணையின் மீது உண்மையான அக்கறை கொள்வதும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வதும், கடினமான காலத்தில் அவர்களோடு இருப்பதும் மிகவும் முக்கியமாகும்.


தன்னால் முடிந்தளவு தனது துணைக்கு உதவியாக இருப்பது. அவர்களின் தேவை என்னவென்று மனோ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புரிந்து கொண்டு தனது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். 


ஒரு உண்மையான காதலில் இத்தனை விடயங்களும் நிச்சயமாக இருக்கும். எனவே காதலிப்பது முக்கியமல்ல. உண்மையாக காதலிக்க வேண்டும் என்பதே முக்கியம். என் காதல் வாழ்க்கை எனக்கு இறைவன் 

கொடுத்த வரம்தான் 

No comments:

Post a Comment