Friday, October 12, 2012

LOOK INTO THE CHILD’S WORLD



We don’t realize the importance of few things in our life. We just lead a mechanical life and make our child also mechanical with gadgets like computer, TV, video games, other compulsory classes and not to forget the 100% attendance in school.
The child is just running from morning to evening to school and classes, works like a machine and is locked up in the flat during the rest of the day with the TV. The child is not left free to enjoy few things in life like sitting with his friends in the playground, playing outside, going to cycle riding.
 These activities are really relaxing. I take my son  to the orphanage he  watches all the children there. Such things will make him a better person tomorrow and will inculcate few emotions in him like understanding the other kids feeling, fighting and getting back, convincing, team work etc. These emotions can’t be learned from machines.
  If we blindly set a time and keep chasing him with books, tuition classes, for him to be competitive with the world. Yes, definitely he will be a competitive machine than a good human. The child should be allowed to play and do what he likes to make him understand few things on his own naturally. Only playing can make him understand.
But in today’s competitive world nobody cares for the child’s feeling. We take it granted that the child should listen to the parents and keep his rank constant in the school. Nowdays the schools are also so far and the child has to travel and come back like the way elders work and commute everyday.
 The child leaves home at 7.30 am and comes back at 4.00 pm and then tuition, classes like swimming, boxing, singing, dancing etc whatever the parents wish no matter what the child likes. I have seen in many classes the child is not even interested and cries to parents and parents push him to the master. We can see lots of such dramas at the classes. After completing all this you can see the child sleeping tiredly in sofa/ bed wherever he gets space. I seriously pity the child going through all these things in such a young age. The competitive world has made the kid to go through all this and the child gets no option.
I request the parents not to tire your child too much everyday and let him have time for some creativity and playing on his own. Let him have some time for his wish too. The parents should just guide and suggest/ correct his path but not enforce things on that little mind. He is new to this wonderful world let him see the world and its nature in his own beautiful way. Let this God’s gift in every house enjoy the life. Allow him to touch the sand, tree whatever he feels like. Don’t enforce too much of your hygiene factor on the child. Let him leave in his little fancy thoughts and world everyday. Look into his world its beautiful let him enjoy.
I am sure he will be a great genius one day with the freedom given to him.

தவிப்பு

காணும் பொருட்கள் எல்லாம்
உன் நினைவை தூண்டுகிறது
கணநேரம்தான் என்றாலும்
கனமான நேரமாய் கனக்கிறது

ஒன்றும் செய்ய தோன்றாத இறுக்கம்
உன் வரவை எதிர்பார்ப்பது மட்டுமே
என் பிரதான வேலையாய்

இந்தநிமிடம் நீ என் செய்வாய்
என்பது மட்டுமே என் எண்ணமாய்
உன் நினைவுகளும் எனைசுற்றுமோ
என்னும் போதே ஒரே கலக்கம்

இப்பிரிவு வாடிக்கையாகி
போனாலும் இத்தவிப்பு
மாறுவதேயில்லை 

பிரதிபலிப்பு

நம்மை பிரதிபலிபவர்களை 
நாம் நேசிக்கின்றோம் 
ஆனால் பிரதிபலிப்பே 
உருவம் ஆகிவிடாது 

கோபம் ஓர் அலசல்

கோபம்

தவரென்றரிந்தும்
கோபம் வருகிறது
வார்த்தைகளுக்கு வசபடாத
கோபம் வருகிறது
புத்தியால் கட்டுபடுத்த முடியாதபடி
கோபம் வருகிறது

நல்லவர்க்கும்  கெட்டவர்க்கும்
பலவீனற்கும் பலசாலிகும்
அடிமை தொழில் செய்வோருக்கும்
அதிகாரிகளுக்கும்
இப்படி எந்த பேதமும் இன்றி
கோபம் வருகிறது

சில நேரங்களில் வசை சொற்களாய்
தசை வலிமையாய் வஞ்சம் தீர்க்கும்
செயலாய் வெளிபடுகிறது
கோபத்தை அடக்குதல் தவறென
நான் உணர்ந்திருகிறேன்

சினம் அடக்க அது வெஞ்சினமகிறது
அழுத்தி உள்ளே புதைக்க மீண்டும்
பீறிட்டு கிளம்புகிறது  - பின்
இதன் விளைவு விபரீதத்தில் முடிகின்றது
கோபத்தை அடக்க முயற்சிக்காமல்
ஆராய முயற்சித்தால் நன்று
ஆராய்வதுதான் அடக்கும் வழி

கோபம் என்பது ஒர்
இயலாமையின் வெளிபாடு
சூழ்நிலையின் தாக்கத்தால்
தட்டுக்கி விழுந்துவிடுகின்ற
தூரதிஷ்டம்

உன்னிப்பாய் கவனிக்க அது
பல நேரங்களில் தன்னை காட்டிலும்
வலு குறைந்தோரிடமே காட்டபடுகிறது
கோபம் வரும்போது அதனை
பிரித்து பார்க்க எண்ணுகின்ரேன்

பிரித்து பார்த்தல் என்பது தவிர்ப்பது
கோபத்தை ஐந்து நிமிடம் தள்ளிபோடுவது
இதனால் வேகம் மட்டுப்படுகிறது
இன்னும் மட்டுப்பட்ட இன்னும்
ஐந்து நிமிடம் தள்ளிபோடுங்கள்

முதல் ஐந்து நிமிடத்திற்கும்
அடுத்த பத்து நிமிடத்திற்கும்
மிகுந்த வித்தியாசம்
இருப்பதை உணரலாம்

இடைப்பட்ட பத்து நிமிடத்தில்
வானம் பார்க்கலாம்
தனிமையில் நடக்கலாம்
பிடித்த நினைவுகளை
மனதில் காணலாம்
இதில் படபடப்பு குறைகின்றது


கோபமூட்டியவரை
திடமாகவும் திறனாகவும்
சமாளிக்கும் திறமை உண்டாகிறது


மறுப்போ எதிர்போ
கோபமாக இல்லாமல்
தெளிவாக வருகின்றது
சினம் வெஞ்சினமாக மாறாமல்
எதிராளியின் பலமறிந்து
செயல்திறன் அதிகரிக்கின்றது

செயல்திறன் அதிகரிக்க
கோபப்பட்ட எதிராளியை
எப்படி கையாள வேண்டும் எனும்
நிதானம் வந்துவிடுகின்றது

சமுதாய சீரழிவுகளை
தனிமனித ஒழுக்கத்தை
சீர்படுத்துதல் போன்ற
சில கோபங்கள் நன்மையே





Thursday, October 4, 2012

amma

அம்மா
உன்னை உச்சரிக்கும்
போதெல்லாம் எனக்குள்
நேச நதி அருவியாய்
அவதாரமெடுக்கிறது

அகரம் அறிமுகமான
ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை
எனக்கு அறிமுகபடுத்தியது
என் தலைகோதிய உன் 
விரல்கள் அல்லவா

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது இதய தழுவலும்
பெருமை புன்னகையுமல்லவா

உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர்
வேற்று கிரகத்துள்
நுழைந்த வெறுமை

போலிஇல்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலைகோதும் உன்
விரல்களோடு
வாழதான் பிடித்திருகிறது

வாழ்கை நிர்பந்தங்கள்
உன்னை வலுகட்டாயமாய்
என்னிடமிருந்து  பிரித்துவிட்டது

பனிமழை  பெய்துள்ள
கண்ணாடி பெட்டிக்குள்
ஏனம்மா படுத்துகொண்டாய்

எனை கண்டதும் ஓயாது
பேசும் உன் வாய்  திறவாமல்
பிறைநிலவாய் சில்லிட்டு
துன்பங்களில் இருந்து விடுபட்டு
உள்நோக்கி யோசிக்கும்  யோகியாய்
எங்கே போனாய் எனை
தனியாய் விட்டு

என் மனம் சொல்கிறது
எங்கும் செல்லவில்லை நீ
என் நினைவுகளில் நிறைந்து
நிற்கிறாய் என்று
இமைக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை
சிதறி விழுகிறது என் கண்ணிர்







 

Wednesday, October 3, 2012

படித்ததில் மிகவும் பிடித்தது  -  பின்பற்றபட வேண்டியது

ஞானியரின் ஞானத்தை கேள்
அவசர இரைச்சல் இடையே
அமைதியாய்  இரு
மௌனத்தின் நிம்மதியை
நினைவில் கொள்
முடிந்தவரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்

உன் உண்மையை
இதமாக தெளிவாக கூறு
பிறர் கூறுவதை கவனி
மந்த மூடர்களாய் இருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடமும்
ஒரு கதை உண்டு

உரக்கப் பேசுபவர்களையும்
ஆத்திர காரர்களையும் தவிர்
அவர்கள் உள்ளத்தில்
வெறுப்பை உருவாக்குபவர்கள்

பிறருடன் ஒப்பிட்டால் உனக்கு
கசப்பும் சலிப்புமே மிஞ்சும்
உன்னை விடவும்
உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு

உன் சாதனைகளை
மகிழ்வுடன் அனுபவி
அதேபோல் உன் திட்டங்களை
மகிழ்ச்சியோடு அணுகு

உன் வாழ்க்கை பாதை
எவ்வளவு  சாதரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம்  கொள்
கால மாற்றங்களில் இதுவே
உனது நிரந்தர செல்வம்

தொழிலில் எச்சரிகையோடு இரு
உலகில் ஏமாற்றங்கள் அதிகம்
அதனால் நன்மைகள் இருப்பதை
மறுக்காதே
உயர்ந்த இலக்குகளுக்காக
உழைப்பவர் பலர்
உலகம் முழுவதும் வெற்றிக்கான
வீர முனைப்பு இருக்கிறது

நீ நீயாக இரு
அன்பு காட்டுவதாய் நடிக்காதே
அன்பை ஏளன படுத்தாதே
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தர பசுமை

வயதுகளின் ஆலோசனையை அனுமதி
இளமையின் வேகத்தை நிதானமாக்கி
உள்ளே உரம் பெறு பலம் பெறு
இது எதிர்பாராத தாக்கங்களில்லிருந்து
உன்னை பாதுக்காக்கும்

மிகையான கற்பனைகளால்
மனதை வருத்தி கொள்ளாதே
அசதியும் தனிமையும்
அச்சங்களை பிரசவிக்கும்
முழுமையான கட்டுபாட்டுடன்
உனக்கு நீயே
சலுகைகள் எடுத்துக்கொள்

நீ
இந்த பிரபஞ்சத்தின் குழந்தை
மரங்களுக்கும்  நட்சத்திரங்களுக்கும்
உள்ளது போலவே உனக்கும்
இங்கே உரிமைகள் உள்ளன
புரிந்தாலும் புரியாவிட்டாலும்
பிரபஞ்சம் தன விதிபடியே
இயங்கிகொண்டிருக்கும்

உன் உழைப்பும்
கனவும் எதுவானாலும்
உள்ளே உனக்கோர்
இடம் செய்து கொள்
பொய், புரட்டு பகற்கனவுகளை மீறி
உலகம் அழகானதுதான்
இன்புற்றிரு
இன்புற்றிருக்க முனை

---  எர்மன் ----