Thursday, October 4, 2012

amma

அம்மா
உன்னை உச்சரிக்கும்
போதெல்லாம் எனக்குள்
நேச நதி அருவியாய்
அவதாரமெடுக்கிறது

அகரம் அறிமுகமான
ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை
எனக்கு அறிமுகபடுத்தியது
என் தலைகோதிய உன் 
விரல்கள் அல்லவா

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது இதய தழுவலும்
பெருமை புன்னகையுமல்லவா

உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர்
வேற்று கிரகத்துள்
நுழைந்த வெறுமை

போலிஇல்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலைகோதும் உன்
விரல்களோடு
வாழதான் பிடித்திருகிறது

வாழ்கை நிர்பந்தங்கள்
உன்னை வலுகட்டாயமாய்
என்னிடமிருந்து  பிரித்துவிட்டது

பனிமழை  பெய்துள்ள
கண்ணாடி பெட்டிக்குள்
ஏனம்மா படுத்துகொண்டாய்

எனை கண்டதும் ஓயாது
பேசும் உன் வாய்  திறவாமல்
பிறைநிலவாய் சில்லிட்டு
துன்பங்களில் இருந்து விடுபட்டு
உள்நோக்கி யோசிக்கும்  யோகியாய்
எங்கே போனாய் எனை
தனியாய் விட்டு

என் மனம் சொல்கிறது
எங்கும் செல்லவில்லை நீ
என் நினைவுகளில் நிறைந்து
நிற்கிறாய் என்று
இமைக்குள் சிறைபிடிக்க
முடியவில்லை
சிதறி விழுகிறது என் கண்ணிர்







 

No comments:

Post a Comment