படித்ததில் மிகவும் பிடித்தது - பின்பற்றபட வேண்டியது
ஞானியரின் ஞானத்தை கேள்
அவசர இரைச்சல் இடையே
அமைதியாய் இரு
மௌனத்தின் நிம்மதியை
நினைவில் கொள்
முடிந்தவரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்
உன் உண்மையை
இதமாக தெளிவாக கூறு
பிறர் கூறுவதை கவனி
மந்த மூடர்களாய் இருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடமும்
ஒரு கதை உண்டு
உரக்கப் பேசுபவர்களையும்
ஆத்திர காரர்களையும் தவிர்
அவர்கள் உள்ளத்தில்
வெறுப்பை உருவாக்குபவர்கள்
பிறருடன் ஒப்பிட்டால் உனக்கு
கசப்பும் சலிப்புமே மிஞ்சும்
உன்னை விடவும்
உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு
உன் சாதனைகளை
மகிழ்வுடன் அனுபவி
அதேபோல் உன் திட்டங்களை
மகிழ்ச்சியோடு அணுகு
உன் வாழ்க்கை பாதை
எவ்வளவு சாதரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம் கொள்
கால மாற்றங்களில் இதுவே
உனது நிரந்தர செல்வம்
தொழிலில் எச்சரிகையோடு இரு
உலகில் ஏமாற்றங்கள் அதிகம்
அதனால் நன்மைகள் இருப்பதை
மறுக்காதே
உயர்ந்த இலக்குகளுக்காக
உழைப்பவர் பலர்
உலகம் முழுவதும் வெற்றிக்கான
வீர முனைப்பு இருக்கிறது
நீ நீயாக இரு
அன்பு காட்டுவதாய் நடிக்காதே
அன்பை ஏளன படுத்தாதே
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தர பசுமை
வயதுகளின் ஆலோசனையை அனுமதி
இளமையின் வேகத்தை நிதானமாக்கி
உள்ளே உரம் பெறு பலம் பெறு
இது எதிர்பாராத தாக்கங்களில்லிருந்து
உன்னை பாதுக்காக்கும்
மிகையான கற்பனைகளால்
மனதை வருத்தி கொள்ளாதே
அசதியும் தனிமையும்
அச்சங்களை பிரசவிக்கும்
முழுமையான கட்டுபாட்டுடன்
உனக்கு நீயே
சலுகைகள் எடுத்துக்கொள்
நீ
இந்த பிரபஞ்சத்தின் குழந்தை
மரங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும்
உள்ளது போலவே உனக்கும்
இங்கே உரிமைகள் உள்ளன
புரிந்தாலும் புரியாவிட்டாலும்
பிரபஞ்சம் தன விதிபடியே
இயங்கிகொண்டிருக்கும்
உன் உழைப்பும்
கனவும் எதுவானாலும்
உள்ளே உனக்கோர்
இடம் செய்து கொள்
பொய், புரட்டு பகற்கனவுகளை மீறி
உலகம் அழகானதுதான்
இன்புற்றிரு
இன்புற்றிருக்க முனை
--- எர்மன் ----
ஞானியரின் ஞானத்தை கேள்
அவசர இரைச்சல் இடையே
அமைதியாய் இரு
மௌனத்தின் நிம்மதியை
நினைவில் கொள்
முடிந்தவரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்
உன் உண்மையை
இதமாக தெளிவாக கூறு
பிறர் கூறுவதை கவனி
மந்த மூடர்களாய் இருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடமும்
ஒரு கதை உண்டு
உரக்கப் பேசுபவர்களையும்
ஆத்திர காரர்களையும் தவிர்
அவர்கள் உள்ளத்தில்
வெறுப்பை உருவாக்குபவர்கள்
பிறருடன் ஒப்பிட்டால் உனக்கு
கசப்பும் சலிப்புமே மிஞ்சும்
உன்னை விடவும்
உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு
உன் சாதனைகளை
மகிழ்வுடன் அனுபவி
அதேபோல் உன் திட்டங்களை
மகிழ்ச்சியோடு அணுகு
உன் வாழ்க்கை பாதை
எவ்வளவு சாதரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம் கொள்
கால மாற்றங்களில் இதுவே
உனது நிரந்தர செல்வம்
தொழிலில் எச்சரிகையோடு இரு
உலகில் ஏமாற்றங்கள் அதிகம்
அதனால் நன்மைகள் இருப்பதை
மறுக்காதே
உயர்ந்த இலக்குகளுக்காக
உழைப்பவர் பலர்
உலகம் முழுவதும் வெற்றிக்கான
வீர முனைப்பு இருக்கிறது
நீ நீயாக இரு
அன்பு காட்டுவதாய் நடிக்காதே
அன்பை ஏளன படுத்தாதே
எல்லா விரோதங்களுக்கும்
ஏமாற்றங்களுக்கும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தர பசுமை
வயதுகளின் ஆலோசனையை அனுமதி
இளமையின் வேகத்தை நிதானமாக்கி
உள்ளே உரம் பெறு பலம் பெறு
இது எதிர்பாராத தாக்கங்களில்லிருந்து
உன்னை பாதுக்காக்கும்
மிகையான கற்பனைகளால்
மனதை வருத்தி கொள்ளாதே
அசதியும் தனிமையும்
அச்சங்களை பிரசவிக்கும்
முழுமையான கட்டுபாட்டுடன்
உனக்கு நீயே
சலுகைகள் எடுத்துக்கொள்
நீ
இந்த பிரபஞ்சத்தின் குழந்தை
மரங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும்
உள்ளது போலவே உனக்கும்
இங்கே உரிமைகள் உள்ளன
புரிந்தாலும் புரியாவிட்டாலும்
பிரபஞ்சம் தன விதிபடியே
இயங்கிகொண்டிருக்கும்
உன் உழைப்பும்
கனவும் எதுவானாலும்
உள்ளே உனக்கோர்
இடம் செய்து கொள்
பொய், புரட்டு பகற்கனவுகளை மீறி
உலகம் அழகானதுதான்
இன்புற்றிரு
இன்புற்றிருக்க முனை
--- எர்மன் ----
No comments:
Post a Comment