Friday, October 12, 2012

தவிப்பு

காணும் பொருட்கள் எல்லாம்
உன் நினைவை தூண்டுகிறது
கணநேரம்தான் என்றாலும்
கனமான நேரமாய் கனக்கிறது

ஒன்றும் செய்ய தோன்றாத இறுக்கம்
உன் வரவை எதிர்பார்ப்பது மட்டுமே
என் பிரதான வேலையாய்

இந்தநிமிடம் நீ என் செய்வாய்
என்பது மட்டுமே என் எண்ணமாய்
உன் நினைவுகளும் எனைசுற்றுமோ
என்னும் போதே ஒரே கலக்கம்

இப்பிரிவு வாடிக்கையாகி
போனாலும் இத்தவிப்பு
மாறுவதேயில்லை 

No comments:

Post a Comment