குறளோவியம் - கலைஞர் கருணாநிதி
வெகு நாட்களாக தேடி கிடைக்காத பொக்கிஷமான இந்நூல் 26 ஆம் ஆண்டின் திருமண நாள் பரிசாக என் கணவரிடமிருந்து இன்று கிடைத்தது.
நூலை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து கீழே வைக்க இயலவில்லை. இந்நூலில் 300 குறளோவியங்கள் இடம் பெற்றுள்ளன. 354 குறட்பாக்கள் பயன்படுத்தி இருக்கிறார்.
திருக்குறளுக்கு எவ்வளவோ பேர் உரை எழுதி இருந்தாலும் கலைஞர் அவர்களின் அற்புதமான கற்பனா சக்தி நிறைந்த கதைகளுடன் பகுத்தறிவு சிந்தனை கலந்த இக்குறளோவியம் படிப்போர் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பசுமரத்தாணி போல் பதிந்து போய்விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நான் வாசிக்கும் இந்நூலின் சிறப்புகளை நாளை முதல் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment