நூலக மனிதர்கள்
எஸ் ராமகிருஷ்ணன்
அத்தியாயம் 3 - லாசராவின் வாசகி
இந்த அத்தியாயத்தில் தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் லா.சா.ராவின் தீவிர வாசகியான
ஒரு பெண்ணை குறித்து எழுதுகிறார் .
ஒரு முறை எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் நூலகத்தில் புத்தகம் படிக்க சென்றிருந்தபோது ஒருவர் நூலகரிடம் லா.சா.ராவின் அபிதா இருக்கிறதா ?என்று கேட்கிறார் உடனே அந்த நூலகர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களை காட்டி இவரிடம் உள்ளது என்று சொல்கிறார் புத்தகத்தை எடுக்க வந்த அந்த மனிதர் 'படிச்சிட்டு ரிட்டன் பண்ணிடுங்க என் மக படிக்கணும்னு ஆசை படுறா 'என்கிறார்
அவர் சைக்கிளில் பூ விற்பவர் அவரிடம் உங்களுக்கு லா.சா.ராவை அவ்வளவு பிடிக்குமா என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கேட்கிறார் அதற்கு அவர்
'நான் ஒரு கைநாட்டு படிக்கத் தெரியாது ஆனா என் மக படிப்பா கல்யாணமாகி ரைஸ்மில் தெருவில் குடியிருக்கா கைக்குழந்தையை வச்சுக்கிட்டு வீட்டில் இருக்கிறவ அதான் பகல்ல புக்கு படிச்சிட்டு இருப்பா ' என்கிறார்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கீழ்க்கண்டவாறு அந்தப் பெண்ணை குறித்து எழுதுகிறார் பூக்காரரின்
மகளுக்கு லா.சா.ரா.வை பிடிக்கும் என்பது சந்தோஷம் அளித்தது அந்தப் பெண்ணின் பெயர் , என்ன படித்திருக்கிறார் என்றோ நான் கேட்டுக் கொள்ளவில்லை ஆனால் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அன்று மாலையே அப்புத்தகத்தை நூலகத்தில் திருப்பிக் கொடுத்தேன் உடனே அந்த உடனே அந்த பூக்கார படித்துவிட்டீர்களா என்று கேட்கிறார் அதற்கு நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் லா.சா.ரா திரும்ப திரும்ப படிக்க வேண்டியவர் பிடித்தமான சங்கீதத்தை அடிக்கடி கேட்பது போல எப்போதும் வாசித்துக் கொண்டே இருக்கலாம் என்று ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார் அப்போ பூக்காரர் என் மகளும் அப்படித்தான் சொல்றா அவளுக்கு வேற புத்தகம் ஒன்றும் பிடிக்கல தான்.
லா. சா. ரா மட்டும் தான் படிக்கிறாள் மகளுக்கு கூட ஜனனி தான் பேர் வச்சிருக்கா புதுசா ஏதாவது லா.சா.ரா புத்தகம் வந்திருக்கான்னு கேட்டுகிட்டே இருக்கா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க தம்பி என்கிறார் ஆசிரியரும் நிச்சயம் சொல்கிறேன் என்கிறார்
யாரோ ஒரு பெண் வீட்டில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இத்தனை ஆசையாக படிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது இதுதான் உண்மையான வாசிப்பு அந்த தந்தையிடம் பணம் இல்லை ஒருவேளை கையில் நிறைய பணம் இருந்தால் அவளுக்காக அத்தனை புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விடுவார் அவர்களைப் போன்றவர்களுக்கு தான் நூலகம் கைகொடுத்தது என்கிறார் .
லா சா.ரா குறித்து ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் எழுத்துக்களில் ஒரு துளி வெறுப்பு கிடையாது துவேசம் கிடையாது எவரையும் பற்றிய புகாரும் கிடையாது எளிய சொற்களைக் கூட மந்திரங்கள் ஆக்கிய மகத்தான படைப்பாளி அவர் வாழ்வின் உண்மைகளை கவித்துவமாக எழுதியவர் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் எழுதிக் கொண்டிருந்தவர் உலகளவில் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர் இதனை அவரது வாசகர்கள் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்
லா சாரா தன்னுடைய எழுத்து குறித்து கீழ்க்கண்டவாறு கூறுகிறார்
"என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது சங்கீதம் ஓவியம் எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன ? மௌனத்தை நோக்கிதான் மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருக்கிறது பேசிக்கொண்டே இருக்கும் போது இடையில் திடீரென்று பேச்சு நின்று விடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்து போவது போல் தோன்றும் அதே சமயம் என்ன நேரப் போகிறதோ என்ற பயமும் இருக்கும் ஆனால் அனேக நேரங்களில் மௌனத்தை நோக்கி போகிறேன் என்று சொல்லிவிட்டு எழுத்தாளன் நிறைய பேசுகிறான். நான் நிறைய பேசுகிறேன் ஒருவர் மனதை தொட்டு '"அட இது எனக்கு நேர்ந்தது இதை ஏன் என்னால எழுத முடியலையே இந்த ஆள் எழுதி இருக்கிறானே! என் மனதில் ஓசையை எழுப்புகிறான் " என்று வாசகன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள் அது போலான எழுத்தை தான் நான் நல்ல எழுத்து என்று நினைக்கிறேன் "என்கிறார்
லா.சா.ரா யாரென்றே தெரியாத அந்தப் பூ விற்பவர் தன் மகள் மூலம் கேட்டு கேட்டு லா.சா.ராவை மிக உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடினார் உலகம் அறியாமல் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு நல்லாசிரியன் போல லா. சா. ரா வழிகாட்டுகிறார் என்பது மகத்தான விஷயம்.
நூலகங்கள் குறித்து எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
எப்போதும் நூலகத்திற்கு புதிய நூல்கள் வருவது மிக தாமதமாகவே வருகிறது ஆகவே புதிய புத்தகங்களை உடனே படிக்க முடியாத நிலை வாசகர்களுக்கு ஏற்படுகிறது சில நல்ல புத்தகங்கள் நூலகத்தால் வாங்கபடுவதே இல்லை ஏன் என்று ஒரு காரணமும் கேட்க முடியாது அப்படி ஒரு முறை என் புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டன உடனே நூலக தேர்வு கமிட்டியிடம் சண்டை போட்டேன் நிராகரிக்கப்பட்டால் காரணம் சொல்லத் தேவையில்லை என்கிறார் நூலக ஆணையை குழுமத் தலைவர்.
சாகித்திய அகாதமி விருது வாங்கிய எனது சஞ்சாரம் நாவல் கூட நூலகத்திற்கு வாங்கப்படவில்லை.
புதிய நூல் கட்டுகளை அவிழ்த்து பதிவேட்டில் பதிந்து நூலகத்தில் வைப்பதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகிவிடுகிறது தேவையான புத்தகங்கள் இல்லை பணியாளர்கள் குறைவு என்பதே இதற்குக் காரணம் ஒவ்வொரு நூலகமும் இதுபோன்ற பணிகளுக்கு கல்லூரியுடன் இணைந்து தன்னார்வ தொண்டர்களை உருவாக்க வேண்டும் புத்தகக் கொடைகளையும் உருவாக்க வேண்டும் என்று மிக அருமையான கருத்தை அவர் இந்நூலில் விளக்கியுள்ளார்.
லாசராவின் ரசிகையான ரசிகையான அந்தப்பெண்ணை ஒருமுறையேனும் பார்த்து பேசி இருக்க வேண்டுமென்று
எஸ் ராமகிருஷ்ணன் இந்நூலில் விளக்குகிறார் எனக்கும் கூட அந்த பெண்ணை பார்த்து பேச வேண்டும் என்னும் ஆசை இப்போது நிலவுகிறது.
நன்றி
சரோஜினி கனகசபை
No comments:
Post a Comment