சிறிய உண்மைகள் - எஸ் ராமகிருஷ்ணன்
பகுதி 7 - ஆயிரம் நன்றிகள்
யாசுனாரி கவாபத்தா Thank You என்ற ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார்
இவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
இக்கதையில் ஒரு பேருந்து ஓட்டுனரின் பயணத்தில் தான் சந்திக்கும் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்யும் அவருடைய உயர்ந்த செயலை ச குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்
பேருந்து ஓட்டுனர் தன்னை கடந்து செல்லும் குதிரை வண்டிகள் வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்கிறார் உண்மையான மகிழ்ச்சியோடு அவர் தனக்காக வழிவிடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்கிறார் மலைப்பாதையில் எதிரே வரும் குதிரைகளுக்கு தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்த கூடும் என்பதால் குதிரை வண்டியை கடந்துபோகும் அவர் விளக்குகளை அணைத்து விடுகிறார் மேலும் அந்த குதிரை வண்டி ஓட்டும் நபருக்கும் நன்றி சொல்கிறார் 35 மைல் செல்லும் அந்த பயணத்தில் அவர் ஒரு நூறு முறை நன்றி சொல்லி விடுகிறார்
நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நமக்கு சிறு வயதில் வீட்டில் சொல்லிக் கொடுப்பார்கள் ஆனால் அது மனதில் பதியாது வாழ்க்கைதான் நன்றியின் மகத்துவத்தை நமக்கு புரிய வைக்கிறது என்கிறார் ஆசிரியர்
நம் குழந்தைகளுக்கு நாம் தவறு செய்யும்போது Sorry சொல்லும் பழக்கத்தையும் பிறர் செய்யும் உதவிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனும் பழக்கத்தையும் கண்டிப்பாக உருவாக்க வேண்டும் சில குழந்தைகள் தான் என்ன தவறு செய்திருந்தாலும் Sorry எனும் வார்த்தையை தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் சொல்வதில்லை ஆனால் இதனை கண்டிப்பாக குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்த வேண்டும்
ஜப்பானின் இயல்பு வாழ்க்கையில் நன்றி சொல்லுதல் கலந்திருக்கிறது ஒரு நாளில் எத்தனை முறை நன்றி சொல்வார்கள் என்ற கணக்கே இல்லை மனிதர்களுக்கு மட்டும் இல்லை இயற்கைக்கும் ஜப்பானியர்கள் நன்றி சொல்கிறார்கள் இயற்கை மனிதர்களை மகிழ்வித்து கொண்டே இருக்கிறது அதை மனிதர்கள் பொருட்படுத்துவதில்லை அரிதாகவே உணர்ந்து கொள்கிறார்கள் என்று ஆசிரியர் கூறுகிறார்
பேருந்து ஓட்டுநருக்கு பெயரே இல்லை ஒருவேளை புத்தர் அந்தப் பேருந்தின் சாரதியாக இருந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது என்கிறார் திரு ராமகிருஷ்ணன் அவர்கள்
பகுதி 16 - மகிழ்ச்சியின் தூதுவன்
இப்பகுதியில் ஆசிரியர் தபால்காரர் களையே மகிழ்ச்சியின் தூதுவன் என்று விழிக்கிறார்
மேலும் எழுத்தாளர் ஜான் பிரைன் தபால்காரர்கள் குறித்து கீழ்கண்டவாறு மிக அருமையாக விவரிக்கிறார்
விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார் அவரது கையில் உள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்த போகின்றன என்று அவருக்கு தெரியும் உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர் ஆனால் அதேநேரம் சில கடிதங்கள் சிலரது வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடியவை எதிர்பாராத செய்திகளை கொண்டவை என்பதையும் அவர் அறிந்திருப்பார் ஒரு துறவியைப் போல அவர் சுக துக்கங்களை ஒன்றாக காண்கிறார் என்கிறார் இது உண்மை தானே
இன்றைக்கு யாரும் தபால்காரர்காக காத்திருப்பதில்லை இது மின்னஞ்சல் யுகம் ஆனால் சென்ற தலைமுறைக்கு தபால்காரர் தான் உலகம்
கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு அது வெளியாகுமா என்று காத்திருந்த கதாசிரியர்கள் ஆகட்டும் வேலைக்கு எழுதி போட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்குமா என்று காத்திருக்கும் இளைஞர்கள் ஆகட்டும் ஊரில் வேலை செய்யும் தந்தையிடமிருந்து வரும் கடிதத்திற்கு காத்திருக்கும் பிள்ளைகள் , மனைவி மற்றும் பெற்றோர்கள் ஆகட்டும் மேலும் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நண்பர்களிடம் இருந்து வரும் வாழ்த்து அட்டைகள் ஆகட்டும் இவை அனைத்துக்கும் நம்மிடம் கொண்டு சேர்க்கும் தபால்காரர் அவரவர் கண்ணோட்டத்தில் விண்ணுலகில் இருந்து வரும் தேவதூதன் ஆகத்தான் தோன்றினார்
இன்றைக்கும் பழைய தபால்களை எடுத்துவைத்து வாசிப்பது மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது 20 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த வாழ்த்து அட்டைகள் அனைத்தும் பழைய புகைப்படங்களை பார்க்கும் போது கிடைப்பது போன்ற அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது இதனை வார்த்தைகளால் விளக்க இயலாது
தபால்காரருக்கு தெரியாத மனிதர்களே இல்லை அவருக்கு தெரியாத ரகசியம் எதுவும் இல்லை ஆனால் அவர் அதை எதையும் வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை இன்றைக்கும் மழை நாட்களில் குடையோடு வரும் தபால்காரர்கள் நினைவில் இருக்கிறார்கள்
நாங்கள் பரிட்சையில் தேர்வான போது பள்ளியில் இருந்து அனுப்பிய அஞ்சல் அட்டையை கொடுத்து விட்டு சிரித்த முகத்துடன் மிட்டாய் கேட்கும் தபால்காரர் தாத்தா கண் முன் வருகிறார்
என்னுடைய தாய் தபால்கார தாத்தாவிடம் என் தந்தையின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்சன் தொகை உயர்ந்ததை கூறி மகிழ்ந்ததை மற்றும் அவரும் மகிழ்வுடன் பென்ஷன் தொகையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றதை இன்றும் என்றும் நினைவில் அகலா ஞாபகங்கள்
இத்தகைய சந்தோசங்களை மின்னஞ்சல் என்றைக்கும் நமக்குத் தர இயலாது என்று எழுத்தாளர் கூறுவது உண்மைதான்
No comments:
Post a Comment