கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது -
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
இந்தக் கதையை படித்த போது நானும் ஒரு பெண் எனும் நிலையில் மனமுடைந்து போனேன் கோகிலவாணி போல துன்புற்ற துன்புருகின்ற பெண்களை நாம் வாழ்வில் நேருக்கு நேர் நிறைய காண்கிறோம் ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது? குறைந்தபட்சம் அவர்களுடைய மனோ நிலையை புரிந்து கொண்டு அவர்களை தவறாக பேசாது இருத்தலே அவர்களுக்கு நாம் செய்யும் உதவி
இந்த சமூகத்தில் ஒரு ஆண் சுய ஒழுக்கமின்றி செய்யக்கூடிய வன்மத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை இந்தக் கதை எடுத்துரைக்கிறது ஆசிரியர் அந்தப் பெண்ணின் மனநிலையில் இருந்து இந்தக் கதையை எழுதியுள்ளார்
இந்தக்கதையின் நாயகி கோகிலவாணி அவளுக்கு 15 வயது ஆகும் போது காதலிப்பதை பற்றிய கற்பனைகள் மனதில் புகுந்து விடுகின்றன பள்ளி நேரத்திலும் அவள் தோழிகளும் ரகசியமாக காதலைப்பற்றி பேசுகிறார்கள் அப்போது சாலையில் பயணத்தில் பொது இடங்களில் பதின்வயது இளைஞர்களை காணும்போது இதில் யார் தன்னை காதலிக்க போகின்றனர் என்று நினைக்க ஆரம்பிக்கிறாள் அவளுடைய அறியாமையை நினைத்து நாம் இந்த இடத்தில் வருத்தப்பட வேண்டும். பதின்வயதில் ஆண் பெண் இருவருக்கும் சரியான வழிகாட்டுதல் இல்லாமையினால் ஏற்படக்கூடிய உணர்வுதான் இது
பத்தாவது வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு சிலமாதங்கள் அருகாமையில் உள்ள எஸ்டிடி பூத்தில் வேலை செய்கிறாள் எஸ்டிடி பூத் நடத்தும் சொக்கநாதன் தினசரி அவளை கடைக்கு அனுப்பி சிகரெட் வாங்கி வரச் சொல்கிறான் அவள் ஒரு பெண் என்றும் யோசிக்காமல் அவள் முன்பாகவே பச்சை பச்சையாக போனில் பேசுகிறான் தன்னை ஒரு பெண்ணாக கூட அவன் மதிப்பது இல்லையே என்ற ஆதங்கம் கோகிலவாணிக்கு நிறைய இருக்கிறது
இந்நிலையில் எஸ்டிடி பூத் உரிமையாளர் மாம்பழத்தில் புதிதாக தொடங்கியிருந்த ஜெராக்ஸ் கடைக்கு அவளை இடம் மாற்றுகிறான் அப்போது அவள் தினமும் மின்சார ரயிலில் போய் வர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அப்போது மகேஷ் எனும் பையனை சந்திக்கிறாள் இரண்டு நாட்களில் இரண்டு பேரும் பேசி பழகி விட்டார்கள் அவனும் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் தான் தினமும் அவளுக்காக டிபன் பாக்ஸில் ஏதாவது ஒரு உணவு கொண்டு வந்து தருவான் பக்கத்தில் உட்கார்ந்தால் கூட அவள் மீது கைபடாமல் நடந்து கொள்கிறான் அவள் போட்டிருக்கும் புதிய உடையோ பாசியோ பொட்டோ ஹேர் கிளிப் எதுவாக இருந்தாலும் உனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது என்று அவளை பாராட்டுகிறான் அதனால் தான் ஒரு நல்லவனை காதலிப்பதாக பெருமை கொள்கிறாள் கோகிலவாணி.
இந்நிலையில் ஒரு நாள் அவள் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது நேர் எதிரில் நின்று கொண்டிருந்த ஒருவன் அவளை பார்த்து கை அசைக்கிறான் தன்னுடைய உள்ளங்கையில் ஐ லவ் யூ யுவர்ஸ் துரை என்று எழுதி காண்பிக்கிறான் ஒரு நாள் அவள் ரயிலை விட்டு இறங்கி நடக்கும்போது அவளிடம் வந்து உனக்காகத்தான் தினம் தாம்பரத்தில் இருந்து ரயிலில் வருகிறேன் என்று அவளிடம் கூறுகிறான் மற்றொரு நாள் படத்துக்கு போவோமா என்று கேட்கிறான் அப்போது கோகிலவாணி எனக்கு இதெல்லாம் பிடிக்காது என்று சொல்கிறாள் அப்போ நீ என்ன லவ் பண்ணலையா என்று கேட்கிறான் நான் எதுக்கு உன்ன லவ் பண்ணனும் என்று கோகிலவாணி கேட்கிறாள் பின்னர் அந்த பெண் சொல்கிறாள் நான் மகேஷ் என்பவரை லவ் பண்ணுகிறேன் பிரச்சனை பண்ணாமல் போய்விடு என்கிறாள் அப்போது துரை அவளை பச்சை பச்சையாக திட்டுகிறான் திட்டி விட்டு நீ என்னை லவ் பண்ணித்தான் ஆகணும் நான் முடிவு பண்ணிட்டேன் அப்படின்னு அவ கிட்ட சொல்கிறான்
இதனை கோகிலவாணி தான் விரும்பும் மகேஷிடம் சொல்கிறாள் மகேஷ் அவனிடம்தான் பேசுவதாக சொல்கிறான் ஆனால் துரை மகேஷ்சை அடித்து விடுகிறான் இதனால் அவன் இவளை நேரடியாக பார்த்து இது நமக்கு ஒத்து வராது விலகிக் கொள்வோம் என்கிறான் கோகிலவாணி மனமுடைந்து போகிறாள்
மீண்டும் துரை கோகிலவாணி இடம் வந்து நான் மட்டும் தாண்டி உன்னை லவ் பண்ணுவேன் வேற யாரு உன்னை லவ் பண்ணினாலும் நீ செத்தே உன் மேல ஆசிட் ஊத்துவேன் பார்த்துக்கோ என்று கடுமையாக திட்டுகிறான் நீ என்ன லவ் பண்றியா இல்லையான்னு இப்பவே தெரியனும் அப்படின்னு சொல்லி மிரட்டுகிறான் அதுமட்டுமின்றி இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்ணின் மீது ஆசிடை ஊற்றுகிறான் கொதிக்கும் நெருப்பு முகத்தில் நுழைத்து விட்டது போல் எரிய ஆரம்பித்தது துரை கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடுவது மட்டும்தான் அவளுக்கு தெரிந்தது அவள் முன்பிருந்த உலகம் மெல்ல புகைமூட்டம் கொண்டு மங்கத் துவங்கியது
கோகிலவாணி 6 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் அவள் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவளது அப்பாவும் அம்மாவும் உறவினர்களும் மாறி மாறி அவளை மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
பெண் மருத்துவர் அவள் முகத்தை துடைத்தபடியே உனக்கு எத்தனை
லவ்வர் டி என்று நக்கலாக கேட்கிறார் மருந்தாளுநர் அவள் முகத்தில் உள்ள காயத்தை துடைத்தபடியே இனிமே உன்னை ஒரு பையனும் திரும்பி பார்க்க மாட்டான் நீ எங்கு வேணாலும் போகலாம் எந்த நேரம் வேணாலும் வீட்டுக்கு வரலாம் உன்னை யாரு பாலோ பண்ண போகிறார்கள் என்று நக்கல் அடிக்கிறான் கோகிலவாணிக்கு அவர்கள் கூறும்போது ஆத்திரமாக வந்தாலும் வாய் திறந்து பேசவில்லை நாம் செத்தே போயிருக்கலாம் என்று யோசிக்கிறாள் வாழ்க்கையை எப்படி கடந்து செல்லப் போகிறோம் என்று நினைத்து வேதனை கொள்கிறாள் அந்த வலி ஆசிடின் கொதிப்பை விட அதிகமாக இருந்தது.
அவள் சாவகாசமாக சுற்றி திரிந்த உலகம் ஒரு நாளில் அவளிடம் இருந்து பிடுங்கி எறியப் பட்டது தோழிகள் குடும்பம் படிப்பு வேலை அத்தனையும் அவளிடமிருந்து விலகிப் போய் விட்டது மருந்து மாத்திரைகளும் களிம்பு மருந்துகளும் அவளது அன்றாட உலகமாய் இருந்தது அழுது ஓய்ந்து ஒடுங்கிப் போகிறாள்
இந்நிலையில் ஆசிரியர் அவள் தன்னை பற்றி யோசிப்பதை இவ்வாறு விளக்குகிறார் பல நேரங்களில் தன்னை கழிப்பறை மூலையில் வீசி எறியப்பட்ட பாதி எரிந்து போன தீக்குச்சி போலவே உணர்ந்திருக்கிறாள் தான் ஒரு தலைப்பு செய்தியாக போகிறோம் என்று கோகிலவாணி ஒரு நாள் கூட நினைத்துக் பார்த்திருக்க மாட்டாள் கோகிலவாணி தலைப்பு செய்தியாக அதற்கு நாம் காரணமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள முடியாது அவள் நம்மை குற்றம் சொல்லவில்லை ஆனால் அவள் நம்மை கண்டு பயப்படுகிறாள் நம் யாவரையும் விட்டு விலகிப் போய் இருக்கிறாள்
உபாசனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அவளை தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்ட போது அவளுக்கு வயது 32 அது ஒரு பார்வையற்றவர்களுக்கான சேவை செய்யும் நிறுவனம் பார்வை குறைபாடு கொண்டவர்களே அங்கு பெரும்பாலும் பணியாற்றிக் கொண்டிருந்தனர் அதனால் யாரும் அவளைக் கேலி செய்வார்கள் என்ற பயமின்றி அவள் வேலைக்கு போய் வர துவங்கினாள்
சென்ற வருடத்தில் ஒரு நாள் கடற்கரையில் தற்செயலாக துரையை பார்க்கிறாள் அவனுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது ஏனோ துறையின் மனைவியிடம் போய் பேச வேண்டும் போல் இருந்தது அவளுக்கு அந்தக் குழந்தையையும் கொஞ்சலாமா என்று கூட தோன்றியது ஆனால் அவன் இவளைப் பார்த்ததும் மனைவியிடம் ஏதோ சொல்லி அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்
அந்த நிலையில் கோகிலவாணி யோசிக்கிறாள் நாம்தானே துரை மீது கோபமும் வெறுப்பும் கொள்ள வேண்டும் அவன் ஏன் என்னை பார்த்த உடன் எழுந்து ஓடுகிறான் பயமா கடந்தகாலத்தில் நினைவுகள் எதுவும் தன் முன்னால் வந்து நின்று விடக்கூடாது என்ற பதைபதைப்பா என்ற யோசனையுடன் அவர்கள் போவதையே கோகிலவாணி பார்த்துக்கொண்டே இருக்கிறாள்
ஒரு பெண் மீது ஆசிட் அடித்தவன் என்று அவனைப் பார்த்தால் யாராவது சொல்வார்களா என்ன அவனுக்கு ஆசிட் வீசியது என்பது ஒரு சம்பவம் ஆனால் கோகிலவாணிக்கு?
உலகம் தன்னை கைவிட்டு யாருமற்ற நெருக்கடிக்கு உள்ளாக்கி வைத்து இருப்பதை உணர்ந்து கொண்டவளை போல நீண்ட நேரத்திற்கு பிறகு ரயில் நிலையத்தை நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள் எதற்காக இவ்வளவு குரூரமான தண்டனை தனக்கு வழங்கப்பட்டது என்பதை நினைத்து
அவள் அழுதுகொண்டே இருக்கிறாள்
No comments:
Post a Comment