தற்போது பிள்ளைகள் தங்களிடம் பாசமாக இல்லை என்று வருந்தும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
முதியோர் இல்லங்களுக்கு தள்ளப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்து தான் வருகிறது இந்த நிலை சரியானதல்ல
பெற்றோர்களை தன் இல்லத்தில் வைத்து அன்போடு பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் இந்நிலை ஏன் நேர்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பெற்றோர் பிள்ளைகளிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது ஆழமானது பிள்ளைகள் பெற்றோரிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது அல்ல அறிவுப்பூர்வமானது மட்டுமே
பெற்றோரிடம் தன் பிள்ளைகள் பிறந்தது முதல் இன்றுவரை உள்ள அத்தனை நிகழ்வுகளும் நினைவுகளும் அணுவணுவாக மிக ஆழமாக பதிந்து கிடக்கின்றன.
ஆழமான உணர்ச்சியால் எழுகிற பாசம் தன்னிச்சையானது . ஆனால் அறிவால் எழுகிற பாசம் ஆக்க பூர்வமானது.
தாய் தன் குழந்தையிடம் செலுத்தும் பாசம் என்பது இயற்கையின் நியதி .சந்ததி வளர இயற்கை வகுத்துள்ள திட்டம்.
ஆனால் எவ்வளவோ ஒன்றுபட்டு வாழ முயன்றும் பல பிள்ளைகளாலும் பெற்றோர் களாலும் அது முடியாமல் போவது ஏன் என்பதை முதியவர்கள் சிந்திக்க வேண்டும்.
முதியவர்கள் தங்கள் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் அவர்கள் பிள்ளைகளுடன் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக வாழ இயலும்.
மனம் பக்குவப்படும் நிலையில் தங்கள் விருப்பப்படி தங்கள் வரையறைக்கு உட்பட்டு தங்கள் பிள்ளைகளும் வாழவேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழாது.
எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் ஏமாற்றமும ஏற்படாது. அப்போது தேவையற்ற உபதேசங்களை செய்யும் பழக்கம் முதியோர்களிடம் இருந்து தானாக விடை பெற்று விடும்
பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளே பெரும்பாலும் சொல்லும் காரணம் வீட்டில் அவர்கள் விடாது குறைகூறி பேசுவதையும் அறிவுரை கூறுவதை தாங்க முடியவில்லை.
தங்கள் பிள்ளைகளையும் மருமகளையும் நெறிப்படுத்தி வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பை கடவுள் தங்கள் மேல் சுமத்தி உள்ளதாக பெரும்பாலான பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .
இதனால் அவர்கள் ஓயாமல் அறிவுரை சொல்லவும் பிள்ளைகளும் மருமகள்களும் செய்யும் செயல்களை கடுமையாக விமர்சிக்கவும் தலை படுகிறார்கள்.
தலைமுறை இடைவெளி தாண்டி விஷயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெற்றோருக்கும் இருப்பதில்லை பிள்ளைகளுக்கும் இருப்பதில்லை இதுவே சிக்கல்களுக்கு அடிப்படை காரணமாகும் .
எது சரி எது தவறு என்பதை பெற்றோர் தங்கள் வாழ்க்கை முறை மூலம் போதிக்க வேண்டுமே தவிர தங்கள் வார்த்தைகள் மூலம் அல்ல .
No comments:
Post a Comment