வெண்ணிற இரவுகள்
ஆசிரியர் - ஃயோதர் தஸ்தயேவ்ஸ்கி
தமிழில் -ரா.கிருஷ்ணையா
இயக்குனர் ஜனநாதன் அவர்களால் இயற்கை என்ற திரைப்படம் வெண்ணிற இரவுகள் நாவலை தழுவி எழுக்கப்பட்டதே.
கதையில் கதையின் நாயகன் தஸ்தயேவ்ஸ்கியே.கனவு உலகிலேயே வாழும் நம் நாயகனுக்கு அதிர்ஷ்ட வசமாக ஒரு இரவில் நாஸ்தென்காவின் பரிச்சயம் கிடைக்கிறது.அவர்களுக்குள் ஏற்படும் நான்கு இரவு சந்திப்புகளும் அவர்களின் உரையாடலுமே வெண்ணிற இரவுகள்.
இந்த உலகில் வாழ புடிக்காதவர்களுக்கும் அல்லது வாழ முடியாதவர்களுக்கும் கனவுலகமே ஆறுதல். அப்படி படைக்கபட்ட உலகம் அவனுடையது அவனுக்கானது. அங்கு அவனே ராஜா. அப்படிப்பட்ட கனவுலகில் படைக்கப்பட்ட ராணியை அவன் சந்திக்க நேர்ந்தால், அவளின் காதல் அவனுக்கு கிடைக்க பெறும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவனின் மன ஓட்டமே வெண்ணிற இரவுகள்.
இயற்கை படத்தில் ஒரு வசனம் ' இந்த உலகில் அஃறிணை அனைத்துக்கும் காதல் பற்றி தெளிவு இருக்கிறது. ஆறறிவு படைத்த மனிதனிக்கு தான் இதில் பிரச்சினை வருகிறது'.
எவ்வளவு உண்மை இந்த வரிகள்.
இரவிற்குள் செல்லும் முன் வெஸ்கியின் வரலாறு கொஞ்சம் திக்குமுக்காடத்தான் செய்கிறது.
யாருக்குத்தான் சோகம் கஷ்டம் இல்லை. இருக்கட்டும் ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு கொடிய அனுபவங்கள் அமையக்கூடுமா ?
பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து தொடங்கும் கதை 1848 ல் எழுதப்பட்டதொன்று. பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் விசித்திரமான நிலைமையையும் அதற்கு பின்னால் அமைந்த கரைந்து போன இரவின் தாக்கத்தையும் விவரிக்கும் நூல்,
தஸ்தயேவ்ஸ்கி இளமைப்பருவம் அது,
பீட்டர்ஸ்பர்க் நகரத்தை விட்டு எல்லாரும் வெளிநகரம் புகுவதாயும், தான் தனித்துவிடப்பட்ட ஒரு ஜடமென உணர்கிறார் வெஸ்கி. விவரமறிந்தது முதல் இந்நாள் வரை தனிமையைத் தவிர வேறு எதையும் அனுபவிக்காத அந்த ஜீவன் நாஸ்தென்கா எனும் பெண்ணை சந்திக்கிறது.
காதல் விரக்தியில் ஏற்கனவே தடுமாறியிருந்த அப்பெண்ணின் நிலையுணர்ந்து முதன்முதலாய் மனம்விட்டு பேச தொடங்குகிறார் வெஸ்கி. இருவரின் உரையாடல் நான்கு நாட்கள் வரை நீடிக்கிறது. அவ்வளவுதான் கதை.
இந்நான்கு நாட்களுக்குள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்.இவர்கள் நட்பு காதலில் முடிந்ததா ? இல்லை தனிமையையே தஸ்தவெஸ்கி தழுவிக்கொண்டாரா ? சுயநலம் என்று சொல்லாமல் யதார்த்தமாய் இருந்தது ஒவ்வொரு வரிகளும். இடையிடையே கொஞ்சம் நாடகத்தின் வழக்காய் பேச்சுவார்த்தை தொடர்வதால் கொஞ்சம் சோர்வு தட்டுவதாய் இருந்தது.
வெண்ணிற இரவுகள் காதலினால் மூழ்கியதா ? இல்லை ஏமாற்றத்தால் முடிந்ததா ? அடுத்த இரவிற்காய் காத்துக்கொண்டிருக்கிறார் ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி.
No comments:
Post a Comment